/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 5 ஸ்டேஷன்களில் இணைப்பு பாதை தேவை காஞ்சி - சென்னை ரயில் பயணியர் சங்கம் கோரிக்கை
/
செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 5 ஸ்டேஷன்களில் இணைப்பு பாதை தேவை காஞ்சி - சென்னை ரயில் பயணியர் சங்கம் கோரிக்கை
செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 5 ஸ்டேஷன்களில் இணைப்பு பாதை தேவை காஞ்சி - சென்னை ரயில் பயணியர் சங்கம் கோரிக்கை
செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 5 ஸ்டேஷன்களில் இணைப்பு பாதை தேவை காஞ்சி - சென்னை ரயில் பயணியர் சங்கம் கோரிக்கை
ADDED : செப் 19, 2025 10:54 PM
காஞ்சிபுரம்:செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே, ஐந்து ரயில் நிலையங்களில் இணைப்பு பாதை அமைக்க வேண்டும் என, காஞ்சி மற்றும் சென்னை ரயில் பயணியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பயணியர் மற்றும் சரக்கு ரயில் சேவை தடையின்றி நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு - அரக் கோணம் இடையே, காஞ்சி புரம், வாலாஜாபாத் உள்ளிட்ட, 12 ரயில் நிலையங்கள் உள்ளன.
இந்த ரயில் நிலையங்களில் இருந்து தினமும், நுாற்றுக்கணக்கான ரயில் பயணியர், சென்னை, செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த வழித்தடம் ஒரு வழிப்பாதையாக இருப்பதால், எதிர்வரும் ரயிலுக்காக, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால், இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக ரயில் பயணியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து கமிஷன், இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது.
இருப்பினும், இரட்டை ரயில் பாதை திட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வராது என்றும், ஐந்து முக்கிய ரயில் நிலையங்களில், இணைப்பு பாதை அமைக்க வேண்டும் என, காஞ்சி - சென்னை ரயில் பயணியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், சரக்கு மற்றும் பயணியர் ரயில் சேவையில் சிக்கல் எழாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சி - சென்னை ரயில் பயணியர் சங்கத்தின் செயலர் ஜே.ரங்கநாதன் கூறிய தாவது:
இரட்டை ரயில் பாதைக்கான திட்ட அறிக்கையை, இப்போது தயார் செய்துள்ளனர். இந்த திட்டம் பயன் பாட்டுக்கு வருவதற்கு பல ஆண்டுகளாகும். அதற்கு முன், செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே காஞ்சிபுரம், வாலாஜாபாத், பாலுார், திருமால்பூர் ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் இணைப்பு பாதை அமைக்க வேண்டும்.
இதுதொடர்பாக, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ரயில் நிலையங்களில் இணைப்பு பாதை அமைத்தால், சரக்கு ரயில்கள் நின்று செல்ல ஏதுவாக இருக்கும்.
பயணியர் ரயிலும் மணிக்கணக்கில் நிற்க வேண்டியிருக்காது. மேலும், பெண்களுக்கான சிறப்பு ரயிலையும் காஞ்சிபுரத்தில் இருந்து இயக்க கேட்டுள்ளோம்.
குறிப்பாக, சென்னைக்கு செல்லும் ரயில்களை தாமதம் இன்றி இயக்க கோரிக்கை விடுத்து வருகிறோம். தாமதமாக ரயில்களை இயக்குவதால், அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.