/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருத்துவமனைகளில் மருந்து இருப்பு விபரம் அதிகாரிகளிடம் கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்
/
மருத்துவமனைகளில் மருந்து இருப்பு விபரம் அதிகாரிகளிடம் கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்
மருத்துவமனைகளில் மருந்து இருப்பு விபரம் அதிகாரிகளிடம் கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்
மருத்துவமனைகளில் மருந்து இருப்பு விபரம் அதிகாரிகளிடம் கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்
ADDED : செப் 19, 2024 12:05 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாலுகா வாரியாக, ஒரு நாள் முழுதும், மாவட்ட கலெக்டர் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்யும், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் தாலுகா தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, நேற்று பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், கலெக்டர் வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையம் ஆகிய இடங்களை முதலில் ஆய்வு செய்தார்.
அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலைக்கு சென்ற அவர், கைதிகளின் அன்றாட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
கலெக்டர் வளாக மைதானத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் கண்காட்சியினை திறந்து வைத்து, உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, சின்னய்யங்குளம் ரேஷன் கடை ஆகியவற்றில் ஆய்வு செய்தார்.
பின், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை குறித்து கேட்டறிந்து, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதியை பார்வையிட்டார்.
மருந்தகம் அறையை பார்வையிட்டு, மருந்து இருப்பு விபரங்களை கேட்டறிந்தார். சின்னையங்குளத்தில் நடந்த கூட்டுறவு உறுப்பினர் சந்திப்பு முகாமில், 90 பயனாளிகளுக்கு 67.7 லட்சம் மதிப்பிலான மகளிர் சுயஉதவிக்குழு வங்கி கடன், பயிர் கடன் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
மேலும், சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி சார்பில், 8 பயனாளிகளுக்கு, 30.5 லட்ச ரூபாய் மதிப்பிலான சிறு வணிக கடன், அடமான கடனுதவிகளை கலெக்டர் வழங்கியதோடு, பொதுமக்களின் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.