/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி புகார் பெட்டி : சாலையோர குப்பையால் சுகாதார சீர்கேடு
/
காஞ்சி புகார் பெட்டி : சாலையோர குப்பையால் சுகாதார சீர்கேடு
காஞ்சி புகார் பெட்டி : சாலையோர குப்பையால் சுகாதார சீர்கேடு
காஞ்சி புகார் பெட்டி : சாலையோர குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 09, 2025 11:16 PM

சாலையோர குப்பையால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம், புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதியில், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்காததால், அப்பகுதியினர் நான்குமுனை சந்திப்பை, குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
குப்பையை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றாததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் தெருவில், கொட்டப்பட்டுள்ள குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றுவதோடு, வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முத்துகுமார்,
காஞ்சிபுரம்.