ADDED : அக் 22, 2025 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழைநீர் வடிகால்வாய்
சீரமைக்கப்படுமா?
கா ஞ்சிபுரம் மாநகராட்சி 50வது வார்டு, ஓரிக்கை, கண்ணகிபுரம், சாந்த விநாயகர் கோவில் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கான்கிரீட் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது.
இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில், குப்பையாலும், செடிகள் வளர்ந்தும் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, செடிகள் வளர்ந்துள்ள கால்வாயை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.மணிகண்டன், கண்ணகிபுரம்.