காஞ்சி புகார் பெட்டி: பாசி படர்ந்த குளம்:சீரமைக்க வேண்டும்
காஞ்சி புகார் பெட்டி: பாசி படர்ந்த குளம்:சீரமைக்க வேண்டும்
UPDATED : ஏப் 29, 2026 09:32 PM
ADDED : ஏப் 29, 2026 07:41 PM
உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில், 1,500 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும், சுயம்பு லிங்கமான வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு வியாழக்கிழமை, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் அருகில் உள்ள தெப்ப குளத்தை, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முறையாக பராமரிக்காததால், குளத்தில் உள்ள நீர் பாசி படர்ந்து உள்ளது.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தில் இறங்கி கை, கால்களை சுத்தம் செய்து தலையில் தண்ணீர் தெளிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், அப்பகுதி நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது.
எனவே, வியாக்ரபுரீஸ்வரர் கோவில் குளத்தில் பாசி படர்ந்துள்ள நீரை அகற்றிவிட்டு குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.சே.அறிவழகன்,
திருப்புலிவனம்.
