காஞ்சி புகார் :கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்:மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
காஞ்சி புகார் :கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்:மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
UPDATED : மே 13, 2026 04:06 PM
ADDED : மே 13, 2026 03:41 PM

காஞ்சிபுரம் மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக சென்று நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
இந்நிலையில், கால்வாயில் அடித்து வரப்பட்ட பாலீத்தின் கவர், பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட குப்பை கழிவுகள், ஆனந்தாபேட்டை, உப்புகுளம் அருகே சிறுபாலத்தின் அருகில் குவியலாக உள்ளது.
இதனால், கோடை மழை பெய்தால், கால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழும் நிலை உள்ளது.
எனவே, ஆனந்தாபேட்டை, உப்புகுளம் அருகில் மஞ்சள்நீர் கால்வாயில் குவியலாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.மோகன்,
காஞ்சிபுரம்.
