UPDATED : மே 18, 2026 05:39 PM
ADDED : மே 18, 2026 05:32 PM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு பள்ள காலனிக்கு செல்லும் பிரதான சாலையில், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின்தட பாதைக்கான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.
நாளுக்கு நாள், இந்த மின்கம்பம்ள் சாய்ந்து வருவதால், எப்போது முற்றிலும் சாய்ந்து விழுமோ என, இப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்போர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- தி.சே.அறிவழகன்,
திருப்புலிவனம்.
