தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/போக்குவரத்திற்கு இடையூறாக விழுந்த மரம்:விபத்து ஏற்படும் சூழல்

போக்குவரத்திற்கு இடையூறாக விழுந்த மரம்:விபத்து ஏற்படும் சூழல்

போக்குவரத்திற்கு இடையூறாக விழுந்த மரம்:விபத்து ஏற்படும் சூழல்


UPDATED : மே 25, 2026 03:48 PM

ADDED : மே 25, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2026 03:48 PM ADDED : மே 25, 2026 03:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், ஓரிக்கைக்கும், குருவிமலைக்கும் இடையே செல்லும் பாலாற்றின் குறுக்கே, 25 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் வழியாக உத்திரமேரூர், அச்சிறுப்பாக்கம், வேடந்தாங்கல், மதுராந்தகம், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி மாலை, காஞ்சிபுரம் வட்டாரத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தபோது, ஓரிக்கை பாலாறு பாலத்தின் அணுகு சாலையோரம் உள்ள மரக்கிளை சாலையில் சாய்ந்து விழுந்தது.

போக்குவரத்திற்கு இடையூறாக விழுந்த மரத்தை அகற்றாததால், அப்பகுதியில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.ராஜேந்திரன்,

காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us