நிழற்குடையில் பெயர்ந்து விழுந்த டைல்ஸ் சீரமைக்க வேண்டும்
நிழற்குடையில் பெயர்ந்து விழுந்த டைல்ஸ் சீரமைக்க வேண்டும்
UPDATED : ஜூன் 03, 2026 06:09 PM
ADDED : ஜூன் 03, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பேருந்து நிறுத்தத்தில் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒதுக்கீடு செய்த 10 லட்சம் ரூபாய் நிதியில் இருந்து, 2024ல், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
வாலாஜாபாத் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நிழற்குடை கட்டடத்தின் பில்லரில் ஒரு பக்கத்தின் டைல்ஸ் பெயர்ந்து விழுந்துள்ளது.
பில்லரில் மீதமுள்ள பக்கங்களில் உள்ள டைல்ஸ்களும் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, துானில் பெயர்ந்து விழுந்த டைல்ஸ்களை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.
- எம்.ரவிச்சந்திரன்,
காஞ்சிபுரம்.
