தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சாலையோர குப்பை குவியலை தினமும் அகற்ற வேண்டும்

சாலையோர குப்பை குவியலை தினமும் அகற்ற வேண்டும்

சாலையோர குப்பை குவியலை தினமும் அகற்ற வேண்டும்


UPDATED : ஜூன் 17, 2026 03:30 PM

ADDED : ஜூன் 17, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 03:30 PM ADDED : ஜூன் 17, 2026 03:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் பஞ்சுகொட்டி தெரு வழியாக காஞ்சி காமாட்சியம்மன், உலகளந்த பெருமாள் கோவில், பேருந்து நிலையம், பூக்கடை சத்திரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையோரம் உள்ள மின்கம்பம் அருகில் பகுதி மக்கள் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நான்கு நாட்களாக மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை அகற்ற வரவில்லை. இதனால், அப்பகுதியில் குப்பை குவியலாக உள்ளது.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, குப்பையை தினமும் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சி.மணிகண்டன்,

காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us