UPDATED : செப் 07, 2026 09:00 PM
ADDED : செப் 07, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம் மாநகராட்சி 24வது வார்டு சேர்மன் சாம்பசிவம் தெரு வழியாக, பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வரதராஜ பெருமாள் கோவில், கே.எம்.வி., நகர், டோல்கேட், திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதிக்கு பலர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இத்தெருவில், வடிகால் வசதி இல்லாததால், நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரத்தில் பெய்த மழை காரணமாக பி.எம்.எஸ்., பள்ளி அருகில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது.
எனவே, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.
