தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி புகார் பெட்டி

காஞ்சி புகார் பெட்டி

காஞ்சி புகார் பெட்டி


ADDED : செப் 16, 2026 03:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 03:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்

மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெரு வழியாக மஞ்சள்நீர் கிளை கால்வாய் செல்கிறது. இந்நிலையில், கால்வாயில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கவர் மற்றும் பாட்டில் உள்ளிட்ட குப்பை கழிவுகள் சிறுபாலத்தின் அருகில் குவியலாக உள்ளது.

கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளதால், காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழும் நிலை உள்ளது.

எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் டி.கே.நம்பி தெருவில், மஞ்சள்நீர் கால்வாயில் குவியலாக உள்ள குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– எஸ்.நீலகண்டன்,

காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us