கிடப்பில் போடப்பட்ட சாலை பணி:விரைந்து முடிக்க வேண்டும்
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி:விரைந்து முடிக்க வேண்டும்
UPDATED : செப் 21, 2026 03:58 PM
ADDED : செப் 21, 2026 03:21 PM
அ நிறம் | அளவு
வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் ஊராட்சி, தர்மநாயக்கன்பட்டரை பிரதான சாலை வழியாக ஏனாத்துார், களியனுார், நத்தப்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிக்கு வாகனங்களில் பலர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் சேதமான சாலையை சீரமைக்க ஐந்து மாதங்களுக்கு முன், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பரப்பி விடப்பட்டது.
அடுத்தகட்ட பணியை தொடங்காமல் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், ஜல்லிக்கற்களின் மீது செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன.
எனவே, தர்மநாயக்கன்பட்டரையில், தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.அருள்முருகன்,
காஞ்சிபுரம்.
