காஞ்சி புகார் பெட்டி:பாதசாரிகளுக்கான நடைபாதை முட்செடிகளால் வீண்
காஞ்சி புகார் பெட்டி:பாதசாரிகளுக்கான நடைபாதை முட்செடிகளால் வீண்
ADDED : நவ 11, 2026 03:27 PM

பாதசாரிகளுக்கான நடைபாதை
முட்செடிகளால் வீண்
ஓரிக்கை மிலிட்டரி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையோரம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்குவதை தவிர்க்க பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
பராமரிப்பு இல்லாததால், ஓரிக்கை சி.வி.எம்., நகர் பகுதியில், நடைபாதையோரம் வளர்ந்துள்ள சீமை கருவேல முட்செடிகள் நடைபாதையை மறைக்கும் வகையில் நீண்டு வளர்ந்துள்ளன.
இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. பாதசாரிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. இதனால், பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதை பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, ஓரிக்கை மிலிட்டரி சாலையில், நடைபாதையை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள சீமை கருவேல முட்செடிகளை வேருடன் அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– எஸ்.முத்துகுமார்,
காஞ்சிபுரம்.
