சேதமடைந்த மின்கம்பம்: கம்பிகள் வெளியே தெரிவதால் அச்சம்
சேதமடைந்த மின்கம்பம்: கம்பிகள் வெளியே தெரிவதால் அச்சம்
ADDED : நவ 23, 2026 04:52 PM

அ நிறம் | அளவு
சேதமடைந்த மின்கம்பம்
கம்பிகள் வெளியே தெரிவதால் அச்சம்
காஞ்சிபுரம் மாநகராட்சி 42வது வார்டு வெங்கடாபுரம் பிரதான சாலையில், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சாலையை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இச்சாலையில் உள்ள மின்கம்பம் எண் 141ல், கான்கிரீட் பெயர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால், மின்கம்பத்தின் உறுதித்தன்மை குறைந்து, காற்று மற்றும் மழையின்போது முறிந்து விழும் சூழல் உள்ளது.
எனவே, வெங்கடாபுரத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– கே.கருணாகரன்,
காஞ்சிபுரம்.
