ADDED : நவ 25, 2026 03:37 PM

ஜல்லிக்கற்கள் மீது 8 மாதங்களாக
தார்சாலை அமைக்காத கீழம்பி சாலை
காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி ஜெ.ஜெ.,நகரில் இருந்து, கீழம்பி ஊராட்சி ஆட்டோ நகருக்கு செல்லும் பிரதான சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது.
இதையடுத்து ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், சாலையை சீரமைக்கும் வகையில், புதிதாக தார்சாலை அமைப்பதற்காக கடந்த பிப்., மாதம் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பரப்பி விடப்பட்டது.
ஆனால், அடுத்த கட்ட பணியை தொடங்காமல் எட்டு மாதங்களுக்கு மேலாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன.
எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சிறுகாவேரிபாக்கத்தில் இருந்து கீழம்பி ஆட்டோ நகர் வரை, புதிய தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
– கே.ராஜமாணிக்கம்,
காஞ்சிபுரம்.
