/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
41 பணிகளுக்கு அனுமதிக்காக காஞ்சி மின்வாரியம் காத்திருப்பு
/
41 பணிகளுக்கு அனுமதிக்காக காஞ்சி மின்வாரியம் காத்திருப்பு
41 பணிகளுக்கு அனுமதிக்காக காஞ்சி மின்வாரியம் காத்திருப்பு
41 பணிகளுக்கு அனுமதிக்காக காஞ்சி மின்வாரியம் காத்திருப்பு
ADDED : ஏப் 15, 2025 01:12 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், மத்திய அரசின் மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில், 2022 - 23ம் நிதி ஆண்டு முதல், 2024 - 25ம் வரை மூன்று நிதி ஆண்டுகளில், விவசாயத்திற்கு தனி மின் இணைப்பு பாதை ஏற்படுத்துதல், இரட்டை மின் மாற்றிகள் அமைத்தல், பழைய மின் வழித்தடத்தை மாற்றி சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான வளர்ச்சி பணிகளை மின்வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த திட்டத்திற்கு, 70.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 48 பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. இதில், 2022 - 23ம் நிதி ஆண்டில் இரட்டை மின் மாற்றி அமைத்தல், ஏழு பணி மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளன. எஞ்சி இருக்கும் 41 பணிகள் நிலுவையில் உள்ளது என, துறை ரீதியாக புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், பல இடங்களில் மின் மாற்றி அமைக்க முடியாமல், குறைந்தழுத்த மின்சாரம் வினியோகிக்கப்படுவதாக புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு விடுவிக்கும் நிதியை பயன்படுத்தி வளர்ச்சி பணிகள் செய்து வருகிறோம்.
ஒரு சில பணிகளுக்கு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர் விடாமல் உள்ளது.
முறையான டெண்டர் விட்ட பின் பணிகள் துவக்கி நிறைவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.