/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொள்முதல் நிலையங்களை துவக்க காஞ்சி விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கொள்முதல் நிலையங்களை துவக்க காஞ்சி விவசாயிகள் எதிர்பார்ப்பு
கொள்முதல் நிலையங்களை துவக்க காஞ்சி விவசாயிகள் எதிர்பார்ப்பு
கொள்முதல் நிலையங்களை துவக்க காஞ்சி விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 20, 2025 10:23 PM
காஞ்சிபுரம்:சொர்ணவாரி பருவத்திற்கு அறுவடை செய்யப்படும் நெல்லை, கொள்முதல் செய்வதற்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 1.20 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.
இதில், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
சம்பா மற்றும் நவரை பருவங்களில் சாகுபடி செய்யப்படும் நெல்லை, கொள்முதல் செய்வதற்கு சில கிராமங்களில் நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கி நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய சொர்ணவாரி பருவத்தில், 12,500 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்தனர். அவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இதில், மணியாட்சி, புத்தேரி, சிறுவாக்கம், புள்ளலுார், கம்மவார்பாளையம், கோவிந்தவாடி, புதுப்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் நெல் அறுவடை செய்துள்ளனர்.
நெல் விற்பனைக்கு, வியாபாரிகளை தொடர்புக் கொண்டால், 80 கிலோ அடங்கிய நெல்லின் விலை, 1,200 ரூபாய்க்கு மேல் நெல்லின் விலை விற்கவில்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கினால், அதே எடையுள்ள நெல்லின் விலை, 1,800 ரூபாய் வரையில் கிடைக்கும் என, விவசாயிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தேவையுள்ள கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை துவக்க வழி வகை செய்ய வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆய்வு செய்து விட்டு, அதிக நெல் இருக்கும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.