/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான சாலையை சீரமைக்க காஞ்சி எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
/
சேதமான சாலையை சீரமைக்க காஞ்சி எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
சேதமான சாலையை சீரமைக்க காஞ்சி எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
சேதமான சாலையை சீரமைக்க காஞ்சி எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
ADDED : அக் 19, 2024 11:56 PM
காஞ்சிபுரம்:சேதமடைந்த சாலை களை சீரமைக்க காஞ்சி புரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மாநகராட்சி அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சி, பூக்கடைசத்திரம் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணி துவங்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், கைத்தறித் துறை அமைச்சருமான காந்திஅவர்கள் தலைமையில், காஞ்சி புரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சி புரம் - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக,காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு சாலை சந்திப்பில், பாதாளசாக்கடை அடைப்பைசரி செய்யும் பணியை காஞ்சிபுரம் தி.மு.க., - எம் எல்.ஏ., எழிலரசன் ஆய்வு செய்தார்.
பாதாள சாக்கடை அடைப்பு சீரமைப்பு பணியை விரைந்து முடிப்பதோடு, சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு சேதமான சாலையை உடனே சீரமைக்கவும்மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது,காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி,மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.