/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்வு

ADDED : மே 13, 2025 08:33 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில், முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.
கல்லுாரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் முனைவர் அண்ணாதுரை வரவேற்றார். கல்லுாரி முதல்வர் முனைவர் முருககூத்தன் பொதுக்குழு கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
புதிய நிர்வாகிகள் தேர்தலை, பச்சையப்பன் அறக்கட்டளை கண்காணிப்பாளர்கள் சுதாகர், சரவணன், பிரபாகர், குமார் ஆகியோர் நடத்தினர்.
இதில், சங்க முன்னாள் தலைவர் முனைவர் நந்தகோபால் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
புதிய நிர்வாகிகளாக ராஜேந்திரன் சங்க தலைவராகவும், சுந்தரராஜன் செயலராகவும், கல்லுாரி முதல்வர் முனைவர் முருககூத்தன் பொருளாளராகவும், ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் துணை தலைவர், துணை செயலர் மற்றும் 12 புதிய செயற்குழு உறுபினர்களும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் முனைவர் பழனிராஜ் நன்றி கூறினார்.