sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 வில்வித்தை போட்டியில் வென்ற காஞ்சி மாணவ -- மாணவியர்

/

 வில்வித்தை போட்டியில் வென்ற காஞ்சி மாணவ -- மாணவியர்

 வில்வித்தை போட்டியில் வென்ற காஞ்சி மாணவ -- மாணவியர்

 வில்வித்தை போட்டியில் வென்ற காஞ்சி மாணவ -- மாணவியர்


ADDED : ஜன 01, 2026 05:13 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மாணவ - மாணவியர் தங்கம், வெள்ளி வென்று அசத்தி உள்ளனர்.

தமிழ்நாடு பாரம்பரிய வில்வித்தை சங்கம் சார்பில் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கும் மாநில அளவிலான வில்வித்தை போட்டி திண்டுக்கல்லில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். தமிழத்தில் 20 மாவட்டங்களில் இருந்து, 320 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஹெல்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி குழுவினர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களது ஒருங்கிணைப்பில் காஞ்சிபுரம், நாய்க்கன்பேட்டை, வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

இதில், 16 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஹைதராபாதில் நடந்த தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்று தங்கம், வெள்ளி வென்று நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினர்.

வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு காஞ்சிபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்று மாணவ - மாணவியரை பாராட்டி, சிறப்பு பரிசுகள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us