/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் செயலற்று போன வடிகால்வாயால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கும் அவலம்
/
காஞ்சியில் செயலற்று போன வடிகால்வாயால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கும் அவலம்
காஞ்சியில் செயலற்று போன வடிகால்வாயால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கும் அவலம்
காஞ்சியில் செயலற்று போன வடிகால்வாயால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கும் அவலம்
ADDED : அக் 29, 2025 11:45 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வடிகால்வாய் செயலற்று போனதால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது.
காஞ்சிபுரம் நகரில் டி.கே.நம்பி தெரு, ஓரிக்கை, செவிலிமேடு, கலெக்டர் அலுவலக சாலை என நகரின் பல்வேறு இடங்களில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், 5 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு ஆண்டுகளுக்கு முன், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
நகரின் பல இடங்களில் இந்த மழைநீர் வடிகால்வாய் முறையாக இயங்கினாலும், மேட்டுத் தெருவில் இருந்து கீரை மண்டபம் இடையேயான பகுதியில், மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், சாலையின் உயரம் மேடு பள்ளமாக இருப்பதால், தண்ணீர் தேங்குகிறது.
அதேபோல, காமராஜர் சாலை , வள்ளல் பச்சையப்பன் சாலை, பேருந்து நிலையம் சுற்றிலும் உள்ள பகுதிகள் என, நெடுஞ்சாலை துறை அமைத்த மழைநீர் கால்வாயில் கழிவுநீர் மட்டுமே ஓடுவதால், மழைநீர் அதில் வடிவதற்கான வாய்ப்பு இல்லை .
அதனால், மழைநீர் சாலையிலேயே தேங்குகிறது. மழைநீர் கால்வாய்களில் கட்டடங்களின் கழிவுநீர் ஓடுவதை தடுக்காததால், இந்த கால்வாய்களால் எந்த பலனும் ஏற்படவில்லை.
மேலும், நகரின் முக்கிய சாலைகளில் உள்ள மழைநீர் கால்வாய்களை நெடுஞ்சாலைத் துறை சீரமைக்க வேண்டும் என, கடந்த மார்ச் மாதம் நடந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையை கேட்டுக் கொண்டது.
இருப்பினும், நகரில் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் மழைநீர் கால்வாய்கள் படுமோசமாக காணப்படுவதால், அவை செயலற்று கிடக்கின்றன.
நெடுஞ்சாலைத் துறை சாலையின் உயரத்தையும், கால்வாயையும் சரிசெய்து, மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

