/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடு அனுஷ்டானகுள உற்சவத்தில் வேடுவர் அலங்காரத்தில் காஞ்சி வரதர்

ADDED : ஜன 03, 2024 09:26 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா 21 நாட்கள் முடிந்ததும், செவிலிமேட்டில் ராமானுஜருக்கு உள்ள தனி சன்னிதியில் அனுஷ்டான குள உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான அனுஷ்டான குள உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாள், கோவிலில் இருந்து, நேற்று காலை புறப்பாடாகி, செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில், மதியம் 12:00 மணிக்கு எழுந்தருளினார்.
உடையவர் சன்னிதி அருகில் அமைந்துள்ள சாலை கிணற்றில் உள்ள புனித நீர் எடுத்து வரப்பட்டு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வேடுவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுவாமிக்கு மஹா தீபாராதணை முடிந்ததும், அங்கிருந்து துாப்புல் வேதாந்த தேசிகர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு பெருமாளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின், அங்கிருந்து புறப்பாடாகி வரதராஜ பெருமாள் சென்றார்.
செவிலிமேடு அனுஷ்டானகுள உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.