sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் கைத்தறி ஆடைகளுக்கு வரி விலக்கு கேட்கும் காஞ்சி நெசவாளர்கள்

/

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் கைத்தறி ஆடைகளுக்கு வரி விலக்கு கேட்கும் காஞ்சி நெசவாளர்கள்

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் கைத்தறி ஆடைகளுக்கு வரி விலக்கு கேட்கும் காஞ்சி நெசவாளர்கள்

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் கைத்தறி ஆடைகளுக்கு வரி விலக்கு கேட்கும் காஞ்சி நெசவாளர்கள்


ADDED : செப் 02, 2025 01:20 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், தீபாவளி பண்டிகையின்போது ஜி.எஸ்.டி., சீரமைப்பு இருக்கும் என, பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், கைத்தறி ரக ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நெசவாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சுதந்திர தின விழாவின்போது பிரதமர் மோடி பேசும்போது, 'ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும் எனவும், அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியை குறைத்து, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், உள்ளூர் விற்பனையாளர்கள் ஆகியோருக்கு பயனளிக்கும் என பேசினார்.

நாட்டில் நான்கு அடுக்குகளாக உள்ள ஜி.எஸ்.டி., வரி விகிங்கள், 5 மற்றும் 18 என்ற இரு வரி விகிதங்களாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பு நடைபெற உள்ள நிலையில், நாட்டின் ஜவுளி துறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக, கைகளால் மட்டுமே நெய்யக்கூடிய கைத்தறி நெசவாளர்கள் நெய்யும் பட்டு சேலைகள், பருத்தி ஆடைகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜி.எஸ்.டி., வரி அமலான கடந்த 2017ம் ஆண்டு முதலே, கைத்தறி ரக சேலைகளுக்கு ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கைகளால் நெய்யப்படும் பட்டு, பருத்தி ஆடைகளுக்கு ஏன் 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது என, நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது ஜி.எஸ்.டி., சீரமைப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என, பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், கைத்தறி நெசவாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், கைத்தறி ரக ஆடைகளுக்கு வரி விலக்கு அறிவிப்பாக வெளியிட வேண்டும் என, நெசவாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜி.எஸ்.டி., சீரமைப்பு தீபாவளி சமயத்தில் வெளியிடும்போது, நெசவாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், வரி விலக்கு அளிக்க வேண்டும். கைத்தறி ஆடைகள் கைவினை பொருட்களாகும். இதை பல ஆண்டுகளாக நாங்கள் தெரிவிக்கிறோம். மூலப்பொருட்களுக்கும், பட்டு சேலைக்கும் ஜி.எஸ்.டி., விதிக்க கூடாது. டி.முருகேசன், நெசவாளர், காஞ்சிபுரம்


கைத்தறி ஆடைகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். பட்டு சேலை மட்டுமல்லாமல், சேலையின் மூலப்பொருட்களாக பட்டு, ஜரிகை என அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்படுவது எங்கள் தொழில் மீது பெரிய பாதிப்பு ஏற்படுத்துகிறது. எஸ்.மேகநாதன், நெசவாளர், காஞ்சிபுரம்







      Dinamalar
      Follow us