/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவில் தேரோட்டம் விமரிசை
/
காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவில் தேரோட்டம் விமரிசை
காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவில் தேரோட்டம் விமரிசை
காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவில் தேரோட்டம் விமரிசை
ADDED : மார் 29, 2025 01:36 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பெருமாளின், மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 52வது திவ்யதேசமாக விளங்கி வருகிறது.
சொன்னவண்ணம் செய்த பெருமாள் என அழைக்கப்படும், இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம், கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.
ஏழாம் நாள் உத்சவமான நேற்று காலை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் காலை 7:40 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் யதோக்தகாரி பெருமாள் எழுந்தருளினார்.
வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபஆராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர். காலை 11:00 மணிக்கு தேர் மீண்டும் நிலைக்கு வந்தந்து. நாளை காலை தீர்த்தவாரியும், 31ம் தேதி வெட்டிவேர் சப்பரத்துடன், 10 நாள் பிரம்மோத்சவத்துடன் நிறைவு பெறுகிறது.