/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி :சேதமடைந்த மின்மாற்றி கம்பங்கள்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி :சேதமடைந்த மின்மாற்றி கம்பங்கள்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி :சேதமடைந்த மின்மாற்றி கம்பங்கள்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி :சேதமடைந்த மின்மாற்றி கம்பங்கள்
ADDED : ஜன 17, 2024 09:47 PM

சேதமடைந்த மின்மாற்றி கம்பங்கள்
காஞ்சிபுரம் அடுத்த, புரிசை கிராமத்தில் இருந்து, துளசாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரம் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மூலமாக, விவசாயிகளின் ஆழ்துளை கிணறு நீர்பாசனத்திற்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த மின்மாற்றி தாங்கி நிற்கும் மின் கம்பங்களை, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் முறையாக பராமரிக்காதால், சேதமடைந்துள்ளன. குறிப்பாக, மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின் கம்பங்களின் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால், எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது. மேலும், பலமாக காற்று அடித்தால், பிரதான சாலையில் செல்லும் வாகனங்களின் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, சேதமடைந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் கம்பங்களை புதிதாக மாற்ற வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
- -எம்.தனஞ்செயன், புரிசை.
ஏரியில் கொட்டப்படும் கழிவுநீர்
ஸ்ரீபெரும்புதுார் அருகே, காட்டரம்பாக்கம் ஏரி நீரை பயன்படுத்தி அப்பகுதியில் 150 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டை, காட்டரம்பாக்கம், அமரம்பேடு, நல்லுார் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து டேங்கர் லாரிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர், காட்டரம்பாக்கம் ஏரியில் கொட்டப்படுகிறது. இதனால், ஏரி நீர் மாசடைகிறது.
கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்தில் கொட்டாமல், நீர்நிலைகளில் கொட்டும் கழிவுநீர் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.கணேசன், இருங்காட்டுக்கோட்டை.
குடியிருப்பின் கழிவுநீரால் துர்நாற்றம்
மாங்காடு நகராட்சி, 2வது வார்டில், ரகுநாதபுரம் பிரதான சாலையில் பள்ளி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலை வழியே கடந்து காலி நிலத்தில் தேங்குகிறது.
இதனால், அந்த வழியே நடந்து செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர். கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுக்க வேண்டும்.
- என்.மோகன், மாங்காடு.