/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி ; குப்பை அகற்றப்படுமா?
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி ; குப்பை அகற்றப்படுமா?
ADDED : செப் 26, 2024 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பை அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்புறம் உள்ள விஷ்ணு காஞ்சி தெருவில், அப்பகுதியினர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
சாலையோரம் குவியலாக உள்ள குப்பையை, மாநகராட்சி நிர்வாகம் அகற்றாததால் அப்பகுதியில் துார்நாற்றம் வீசுகிறது. மேலும், காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, விஷ்ணு காஞ்சி தெருவில் சாலையோரம் உள்ள குப்பையை மாநகராட்சி நிர்வாகம் உடனே அகற்ற வேண்டும்.
- இ. ஜனார்த்தனம்,
காஞ்சிபுரம்.