/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் : புகார் பெட்டி; கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பங்கள்
/
காஞ்சிபுரம் : புகார் பெட்டி; கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பங்கள்
காஞ்சிபுரம் : புகார் பெட்டி; கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பங்கள்
காஞ்சிபுரம் : புகார் பெட்டி; கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பங்கள்
ADDED : அக் 15, 2025 08:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பங்கள்
காஞ்சிபுரம் அடுத்த, நெல்வாய் கிராமத்தில் இருந்து, மடப்புரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, பரந்துாரில் இருந்து, தொடூர், கூத்திரம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
இந்த சாலை ஓரத்தில், 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. பெரும்பாலான மின் கம்பங்களில், கான்கிரீட் பெயர்ந்து உள்ளது. பலத்த காற்று அடித்தால், மின் கம்பங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சு.நடராஜன்,
காஞ்சிபுரம்.