/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் புகார் பெட்டி; சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய்
/
காஞ்சிபுரம் புகார் பெட்டி; சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய்
காஞ்சிபுரம் புகார் பெட்டி; சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய்
காஞ்சிபுரம் புகார் பெட்டி; சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய்
ADDED : நவ 13, 2024 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய்
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சந்தவேலுார் ஊராட்சியில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், சந்தவேலுார் ஊராட்சி அலுவலகம், அவசர சிகிச்சை மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நுாலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் சேதமடைந்து உடைந்து உள்ளது. இதனால், அவசர சிகிச்சை மையம், பள்ளி, ஊராட்சி அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள், சேதமான மழைநீர் கால்வாயில் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சு. தர்மராஜ்,
சந்தவேலுார்.