/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

ADDED : மே 29, 2024 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி பகுதியில் மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், தங்களின் மாடுகளை சாலையில் திரிய விடுகின்றனர்.
அவை, போக்குவரத்து இடையூராக சாலையில் நடுவே நிற்கின்றன. இதனால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, கோசாலையில் அடைக்க, செரப்பனஞ்சேரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சா. மாணிக்கம்,
படப்பை.