/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;'பேவர் பிளாக்' நடைபாதை விடுபட்ட இடத்திற்கு தேவை

ADDED : ஜூலை 04, 2024 12:06 AM

'பேவர் பிளாக்' நடைபாதை விடுபட்ட இடத்திற்கு தேவை
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையின் அகலம் விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையோரம் மழைநீர் வடிகால்வாய், நடைபாதைக்கு, 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முத்தியால்பேட்டையில், 10 மீட்டர் நீளத்திற்கு நடைபாதை அமைக்கப்படாமல் விடுபட்டு உள்ளது. இதனால், அப்பகுதியில், மண் அரிப்பு காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையோரம் ஒதுங்கும் இருக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, விடுபட்ட இடத்திற்கு, 'பேவர் பிளாக்' நடைபாதை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.