/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் : புகார் பெட்டி:மின் ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
/
காஞ்சிபுரம் : புகார் பெட்டி:மின் ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
காஞ்சிபுரம் : புகார் பெட்டி:மின் ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
காஞ்சிபுரம் : புகார் பெட்டி:மின் ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
ADDED : ஜூன் 26, 2024 11:44 PM

மின் ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
ஆதனுார் -- கொருக்கந்தாங்கல் சாலையோரம், மின் கம்பங்கள் வழியே மின் வழித்தடம் செல்கிறது. அவ்வாறு செல்லும் மின் கம்பங்களில், செடி, கொடிகள் படர்ந்து மின் ஒயரை சூழ்ந்துள்ளன.
மின் வயர்களில் படர்ந்துள்ள கொடிகளால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, மின் ஒயரில் படர்ந்துள்ள, செடி, கொடிகளை அகற்ற, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செ.பாலமுருகன், ஆதனுார்.
புறக்காவல் நிலையம் படூரில் அமைக்கப்படுமா?
உத்திரமேரூர் ஒன்றியத்தில் படூர், ஆனம்பாக்கம், காட்டாங்குளம், அமராவதிபட்டணம், சிறுமையிலுார், சித்தாலப்பாக்கம், குண்ணவாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு உள்ளன.
உத்திரமேரூரில் இருந்து, 20 கி.மீ., துாரத்தில் இக்கிராமங்கள் உள்ளதால், குற்ற சம்பவங்கள் நிகழும் போது போலீசார் உடனுக்குடன் வந்தடைய முடியாத நிலையும், போலீசார் தொடர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுவதில் சிரமமும் உள்ளது.
இதனால், இந்த கிராமங்களின் மையப் பகுதியான படூர் கூட்டுச்சாலையில் புற காவல் நிலையம் அமைக்க, ஆறு ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் கட்டடப் பணி துவக்கப்பட்டது.
ஆனால், முதற்கட்ட பணியின் போதே அத்திட்டம் கைவிடப்பட்டது. எனவே, அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.மதியழகன், காட்டாங்குளம்.
சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் இடையூறு
காஞ்சிபுரம் - -அரக்கோணம் சாலையில், ஒலிமுகமதுபேட்டை பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தம் அருகே, சாலை இருபுறமும் லாரிகள் நிறுத்துகின்றனர்.
இந்த வாகனங்கள் சாலையோரமாக நிறுத்தி இருந்தாலும், ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தும் போதும். எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட்டு விலகும் போதும் இடையூறாக உள்ளது.
இதை தவிர்க்க, ஒலிமுகமதுபேட்டை பகுதியில் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -நா.அசோக், காஞ்சிபுரம்.