/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;மதூர் கூட்டு சாலையில் நிழற்குடை ஏற்படுத்தப்படுமா?

ADDED : மே 29, 2024 11:55 PM
மதூர் கூட்டு சாலையில் நிழற்குடை ஏற்படுத்தப்படுமா?
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல்- சாலவாக்கம் சாலையில், மதூர் கூட்டுச்சாலை உள்ளது. மதூர், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், சிறுமையிலூர் உள்ளிட்ட கிராமத்தினர், இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இப்பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிறிய அளவிலான பயணியர் நிழற்குடை கட்டடம் பழுதடைந்து இடிந்தது. அதையடுத்து, இதுவரை நிழற்குடை வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.
இதனால், இப்பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிப்படுகின்றனர். எனவே, மதூர் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் புதியதாக பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். அன்பு,
சிறுமையிலூர்.