/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்.: புகார் பெட்டி;குடிநீர் பணிக்காக சேதமான சாலை முறையாக சீரமைக்கப்படுமா?

ADDED : மே 09, 2024 12:19 AM

குடிநீர் பணிக்காக சேதமான சாலை முறையாக சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு சின்னவேப்பங்குளக்கரையில் இருந்து அருந்ததியர் நகருக்கு செல்லும் சாலையோரம் வாரந்தோறும் செவ்வாய்கிழமையில், வாரசந்தை நடந்து வருகிறது.
திருக்காலிமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதியினர் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வீட்டிற்கு வாங்கிச் செல்கின்றனர். வாரசந்தை நடைபெறும் இடத்தில், கடந்த மாதம் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
குழாய் உடைப்பை சீரமைத்த மாநகராட்சி ஊழியர்கள், சாலையை சமன் செய்து முறையாக சீரமைக்கவில்லை. அரைகுறையாக சீரமைக்கப்பட்டுள்ளதால், பள்ளம் தோண்டிய இடத்தில் மண் குவியலாக உள்ளது.
இதனால் செவ்வாய்கிழமை நடக்கும் வாரசந்தையில், வழக்கமான கடைகள் அமைப்பதில் இடையூறாக உள்ளதால், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கடைகள் இயங்குகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனவே, குடிநீர் குழாய் உடைப்புக்காக பள்ளம் தோண்டிய இடத்தை சமன் செய்து, சாலையை முறையாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.அரிகிருஷ்ணன், காஞ்சிபுரம்.