/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நால்வர் இசைத் தமிழ் ஆராதனை விழா
/
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நால்வர் இசைத் தமிழ் ஆராதனை விழா
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நால்வர் இசைத் தமிழ் ஆராதனை விழா
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நால்வர் இசைத் தமிழ் ஆராதனை விழா
ADDED : செப் 28, 2024 10:46 PM

காஞ்சிபுரம்:மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓதுவா மூர்த்திகள் நலச்சங்கம் சார்பில், நால்வர் இசைத்தமிழ் ஆராதனை விழா, நான்காம் ஆண்டு பொதுக்கழு கூட்டம் ஓதுவா மூர்த்திகள் நலச்சங்க தலைவர் பழனி ப.சண்முகசுந்தர தேசிகர் தலைமையில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் ஓதுவார்கள் ஆடலரசன், ராஜபதி, கதிர்வேல் சுப்பிரமணியன், லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.
நால்வர் இசைத் தமிழ் ஆராதனை விழாவையொட்டி, ஓதுவாமூர்த்திகள், நால்வர் திருமேனி சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
இதில், ஓதுவாமூர்த்திகள் இணைந்து ஐம்பெரும் புராணங்களை பாடி நாயன்மார்களை வழிபாடு செய்தனர். தொடர்ந்து, உலக நன்மைக்காக கோவிலில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் அரங்கத்தில் பலன் தரும் பதிகங்களை 200க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகள் இணைந்து பாராயணம் செய்தனர்.
இதில், திரளான சிவனடியார்களும் பங்கேற்று பதிகங்களை பாராயணம் செய்தனர். மதியம் காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவில் உள்ள ஆழ்வார் பங்களா திருமண மண்டபத்தில் மாகேசுவர பூஜை. நிறைவாக காஞ்சிபுரம் ஓதுவார் அருண் நன்றி கூறினார்.
விழாவில், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச பரமாச்சாரியா சுவாமிகள், திருமுறை அருட்பணி அறக்கட்டளை நிறுவனர் சு.சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலையில் ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.