ADDED : ஆக 23, 2011 01:58 AM
மதுரவாயல் : மதுரவாயல் பாலத்தின் கீழ், மர்மமான முறையில் இறந்து கிடந்த
லாரி டிரைவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், கொலை செய்யப்பட்டாரா என்ற
கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ், 35
வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், நேற்று, இறந்து கிடந்தார்.
இது
குறித்து, மதுரவாயல் போலீசார் நடத்திய விசாரணையில், அவர், காஞ்சிபுரம்
மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த, கீரப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில்
வசிக்கும் உமாபதி என்பது, அவரது சட்டை பையையில் இருந்த டிரைவிங் லைசென்ஸ்
மூலம் தெரிந்தது.இவரது மனைவி செல்வி. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே
வீட்டிற்கு செல்லும் உமாபதி, கடந்த வாரம் தான், வீட்டிலிருந்து, லாரி
ஓட்டுவதற்காக வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.இவரது மரணம் குறித்து,
பல்வேறு கோணங்களில், போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.