/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பஸ்சிலிருந்து குதித்த வாலிபர் பலி
/
பஸ்சிலிருந்து குதித்த வாலிபர் பலி
ADDED : செப் 14, 2011 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பிள்ளையார் கோவில் தெருவை
சேர்ந்தவர் ராஜா.
இவரது மகன் விக்னேஷ், 19. செங்கல்பட்டு பை-பாஸ் சாலையில்
உள்ள, தனியார் ஓட்டலில், வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 5
மணிக்கு, வேடந்தாங்கலிலிருந்து செங்கல்பட்டு சென்ற அரசு டவுன் பஸ்சில்,
மாமண்டூரில் ஏறினார். பஸ் வேதநாராயணபுரம் மேம்பாலத்திலிருந்து இறங்கி,
வேகத்தடையில் மெதுவாக சென்றபோது, விக்னேஷ் பஸ்சிலிருந்து குதித்தார்.
அப்போது, தவறி கீழே விழுந்தார். அவர் மீது, பஸ்சின் பின்பக்க டயர்
ஏறியதில், அவர் பரிதாபமாக இறந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார்
விசாரித்து வருகின்றனர்.