/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் பயன்பாட்டிற்கு வந்தது நவீன எரிவாயு தகன மேடை
/
காஞ்சிபுரத்தில் பயன்பாட்டிற்கு வந்தது நவீன எரிவாயு தகன மேடை
காஞ்சிபுரத்தில் பயன்பாட்டிற்கு வந்தது நவீன எரிவாயு தகன மேடை
காஞ்சிபுரத்தில் பயன்பாட்டிற்கு வந்தது நவீன எரிவாயு தகன மேடை
ADDED : ஜூலை 27, 2011 03:09 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், 76 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பில்
அமைக்கப்பட்ட, நவீன எரிவாயு தகன மேடை, பயன்பாட்டிற்கு
வந்தது.பெரியகாஞ்சிபுரம் வெள்ளகுளம் சுடுகாட்டில், நவீன எரிவாயு தகன மேடை
அமைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு, பகுதி இரண்டு திட்டத்தின்
கீழ், 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.இந்நிதியுடன், நகராட்சிப் பொது
நிதி, 56 லட்சம் ரூபாய் சேர்த்து, மொத்தம் உள்ள, 4,926 சதுர அடி
நிலப்பரப்பில், 236 சதுர அடியில், நவீன எரிவாயு தகன மேடை
அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றிலும் புல்வெளி, தியான மண்டபம், முடி திருத்தும்
கட்டடம், குளியல் அறை, கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. கட்டடம் முழுவதும்,
மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி, சோதனை
முயற்சியாக, ஒருவர் உடல் எரியூட்டப்பட்டது. அதன்பின். நவீன எரிவாயு தகன
மேடையைப் பராமரிக்கும் பொறுப்பை கவனிக்க, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு
நவீன எரிவாயு தகன மேடை அறக்கட்டளை துவக்கப்பட்டது.ஒரு உடலை எரிக்க, 750
ரூபாய், ஆம்புலன்சுக்கு 750 ரூபாய், நகராட்சி எல்லைக்கு வெளியே எனவும்,
ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும், 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கவும்,
முடிவு செய்யப்பட்டது.நகராட்சி எல்லை மற்றும் இதர இடங்களிலிருந்து வரும்
சடலங்களும், சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு, தகனம் செய்யப்பட வேண்டும். தகன
மையத்தை, காலை 6 மணியிலிருந்து, மாலை 6 மணி வரை மட்டுமே இயக்க வேண்டும்,
என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள், நகராட்சி சார்பில் அறக்கட்டளைக்கு
விதிக்கப்பட்டுள்ளது.நகராட்சிக்கு வெளியே, 5 கி.மீ., தூரத்திற்குள்
இறப்பவர்களின் உடல்களையும் இங்கு கொண்டு வந்து எரியூட்ட, நகராட்சி அனுமதி
அளித்துள்ளது. நேற்றுமுன்தினம், முறைப்படி, நவீன எரிவாயு தகன மேடை
செயல்பாட்டிற்கு வந்தது.