ADDED : செப் 29, 2025 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:செரப்பனஞ்சேரியில் இருந்து, காஞ்சிவாக்கம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமானதை அடுத்து, நெடுஞ்சாலைத் துறை யினர் சீரமைத்தனர்.
படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரியில் இருந்து, காஞ்சிவாக்கம், நாட்டரசம்பட்டு வழியாக வளையக்கரணை செல்லும் சாலை 6.6 கி.மீ கொண்டது.
இந்த சாலை வழியே, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், படப்பை, தாம்பரம், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பள்ளம் மேடாக உள்ள சாலையில் செல்லும் போது, விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வந்தனர்.
இதனால், இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் சேதமான இடங்களில் தார் கலந்த கற்களை கொட்டி, பள்ளங்களை சீரமைத்தனர்.