/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு பின் கந்த சஷ்டி விழா
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு பின் கந்த சஷ்டி விழா
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு பின் கந்த சஷ்டி விழா
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு பின் கந்த சஷ்டி விழா
ADDED : அக் 22, 2025 11:23 PM

ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவில், ஆறு ஆண்டுகளுக்கு பின் கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடைசியாக 2019ம் ஆண்டு நடந்தது. இதையடுத்து, 'கொரோனா' பெரும்தொற்று மற்றும் கோவில் திருப்பணிகள் காரணமாக, ஆறு ஆண்டுகளாக கந்த சஷ்டி விழா நடை பெறவில்லை.
இதையடுத்து, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் நடந்துவந்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, கடந்த ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து, ஆறு ஆண்டுகளுக்கு பின், நேற்று காலை, கந்த சஷ்டி விழா கோ பூஜையுடன் துவங்கியது. ஆறு நாள் நடைபெறும் விழாவின் முதல் நாளான நேற்று, உற்சவர் முருகன், பச்சைசாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அதேபோல, மூலவருக்கு நாள்தோறும் மூன்றுகால சிறப்பு மஹா அபிஷேகமும், உற்சவர் முருகனுக்கு சத்ருசம்கார திரிசதீ அர்ச்சனை மற்றும் விசேஷ யாக பூஜைகளும் நடக்க உள்ளது.
வரும் 26ம் தேதி, வல்லம் கிராமத்தில் உள்ள சடையீஸ்வரர் கோவிலில் வேல் வாங்கும் விழாவும், 27ம் தேதி சூரசம்ஹாரம், 28ம் தேதி திருக்கல்யாண உத்சவமும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ள து.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.