/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி புகார் பெட்டி; நடைபாதை ஆக்கிரமிப்பு
/
காஞ்சி புகார் பெட்டி; நடைபாதை ஆக்கிரமிப்பு
ADDED : ஜன 08, 2024 11:56 PM

அகற்றப்படுமா?
உத்திமேரூர் பேருந்து நிலையம் இருந்து அரசு மருத்துவமனை வரை உள்ள பஜார் வீதி சாலை குறுகிய சாலையாகவும் உள்ளது.
மேலும், சாலையின் இரு பக்கங்களிலும் கடை வைத்துள்ளவர்கள் நடைபாதையை ஆக்கிரமித்துளளனர். இதனால், சாலையில் அகலம் வெகுவாக குறைந்து விட்டது.
இதனால், பாதசாரிகள் சாலையின் மையப் பகுதியில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதசாரிகளும் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, உத்திரமேரூர் பஜார் வீதியில் சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதைக்கு என, ‛பேவர் பிளாக்' கற்கள் பதிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.சே.அறிவழகன்,
திருப்புலிவனம்.
------------
மழைநீர் வடிகால்வாய்க்கு
கான்கிரீட் தளம் அமைக்கப்படுமா?
சின்ன காஞ்சிபுரம், புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் வழியாக மொட்டைகுளம், சதாவரம், ஓரிக்கை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையோரம் திறந்தவெளி மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
சாலையின் தரைமட்டத்திற்கு கால்வாய் திறந்து உள்ளதால், இரவு நேரத்தில் சாலையோரம் நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, கால்வாய் மீது கான்கிரீட் தளம் அமைத்து மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முத்துகுமார்,
சின்ன காஞ்சிபுரம்.