PUBLISHED ON : நவ 20, 2025 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயணியர் நிழற்குடையில்
இருக்கை சீரமைக்கப்படுமா?
கா ஞ்சிபுரம் விளக்கடிகோவில் தெரு, கீரை மண்டபம் பேருந்து நிறுத்தத்தில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், 2019 - 20ம் நிதியாண்டு, ஒதுக்கீடு செய்த நிதியில் இருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம், உத்திரமேரூர், வந்தவாசி வழிதடத்தில் செல்லும் பேருந்தில் பயணிக்கும் பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நிழற்குடையில் மூன்றாக இணைக்கப்பட்டுள்ள இருக்கை உடைந்த நிலையில் உள்ளது. இதனால், பயணியர் இருக்கையில் அமரமுடியாத நிலை உள்ளது.
எனவே, உடைந்த நிலையில் உள்ள இருக்கையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.ரவிசங்கர், காஞ்சிபுரம்.

