ADDED : ஜன 27, 2026 04:50 AM

சாலையில் படுத்திருக்கும் மாடுகளால் விபத்து அபாயம்
கா ஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை வெண்குடி கிராமம் வழியாக வாலாஜாபாத், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், வெண்குடி உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதியில் மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையை மறித்து மாடுகள் படுத்திருக்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக மிரண்டு ஓடும் மாடுகளால், பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, வெண்குடி கிராமத்தில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் படுத்திருக்கும் மற்றும் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.மதனகோபால், காஞ்சிபுரம்.

