ADDED : மார் 30, 2026 05:24 PM

பயணியர் நிழற்குடை சேதம்
அச்சத்தில் பயணியர்
காஞ்சிபுரம் - வேலுார் சாலை, சிறுகாவேரிபாக்கம், ஜெ.ஜெ., நகர் பேருந்து நிறுத்தத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது.
இங்கு ஜெ.ஜெ., நகர் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதியினர் தாங்கள் பயணிக்க வேண்டிய பேருந்து வரும் வரை, பயணியர் நிழற்குடையில் காத்திருந்து பயணித்து வந்தனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால், நிழற்குடை கூரையில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையிலும், சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும் சேதமடைந்து உள்ளது.
இதனால், நிழற்குடையை பயன்படுத்துவதை பயணியர் தவிர்த்து விடுகின்றனர். எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய பயணியர் நிழற்குடை அமைக்க சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.ராஜேந்திரன்,
சிறுகாவேரிபாக்கம்.
