ADDED : மார் 18, 2025 08:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதி கிராமத்தில், பெரியநாயகி சமேத வானசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசம், சிவராத்திரி, மாசி மகம், காரைக்கால் அம்மையார் குருபூஜை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.
இந்தாண்டிற்கான காரைக்கால் அம்மையார் குருபூஜை, பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தில் நேற்று நடந்தது. அப்போது, கோவில் வளாகத்தில் உள்ள காரைக்கால் அம்மையார் சிலைக்கு, காலை 10:00 மணிக்கு நெய், பால், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின், காலை 11:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மானாம்பதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.