/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி மாணவியர் 210 பேருக்கு கராத்தே சான்று வினியோகம்
/
பள்ளி மாணவியர் 210 பேருக்கு கராத்தே சான்று வினியோகம்
பள்ளி மாணவியர் 210 பேருக்கு கராத்தே சான்று வினியோகம்
பள்ளி மாணவியர் 210 பேருக்கு கராத்தே சான்று வினியோகம்
ADDED : டிச 15, 2025 04:03 AM
காஞ்சிபுரம்: கராத்தே பயிற்சி பெற்ற, அரசு பள்ளி மாணவியர் 210 பேருக்கு, நேற்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சின்ன காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று கராத் தே பயிற்சி பெற்ற மாணவியருக்கு சான்று வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவிற்கு, கராத்தே பயிற்சியாளர் முரளி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்வி ஆய்வாளர் பாலசந்தர், முன்னாள் ராணுவ வீரர் கிள்ளிவளவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அரசு பள்ளி மாணவியர் 210 பேருக்கு, தற்காப்பு பயிற்சி தேர்ச்சி பெற்ற சான்று வழங்கினர்.
இவர்களுக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.