/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்லுாரி மாணவியருக்கு கராத்தே பயிற்சி வகுப்பு
/
கல்லுாரி மாணவியருக்கு கராத்தே பயிற்சி வகுப்பு
ADDED : நவ 05, 2024 10:22 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில் பயிலும் மாணவியருக்கான ஒரு நாள் கராத்தே தற்காப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லுாரி நிர்வாகம் மற்றும் காஞ்சிபுரம் இஷின்றியு கராத்தே பயிற்சி நிலையம் சார்பில் நடந்த இம்முகாமை கல்லுாரி முதல்வர் முனைவர் கோமதி துவக்கி வைத்தார்.
இதில், காஞ்சிபுரம் இஷின்றியு கராத்தே பயிற்சி நிலையத்தின் பொது செயலரும், தலைமை பயிற்சியாளருமான சென்சாய் நூர்முஹம்மது, பெண்களின் பாதுகாப்பிற்க்கான கராத்தே, தற்காப்பு பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார்.
கராத்தே பயிற்சியாளர்கள் வாயிலாக, கல்லுாரி மாணவியருக்கு காரத்தே பயிற்சியும், சாகசங்களும், வீரதீர செயல்களும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், கராத்தே வாயிலாக, மாணவியர் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து எளிமையான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

