/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் இன்று கிக் பாக்ஸிங் போட்டி
/
காஞ்சியில் இன்று கிக் பாக்ஸிங் போட்டி
ADDED : ஏப் 17, 2025 09:59 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கிக் பாக்ஸிங் அமெச்சூர் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான, கிக் பாக்ஸிங் போட்டி, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது.
இதில், 7 - 9 வயதுடைய சப் -- ஜூனியர், 10 - 15; 16 - 18 வயதுடைய ஜூனியர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட சீனியர் என 4 பிரிவுகளில், இப்போட்டியில் பாயின்ட் பயிட், லெயிட் கான்டக்ட், கிக் லயிட் மற்றும் லோ கிக், பார்ம்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.
காஞ்சிபுரத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனையர், மே மாதம், 9 - 11ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என, காஞ்சிபுரம் கிக் பாக்ஸிங் அமெச்சூர் சங்க செயலர் அருண், துனை செயலர் பாபு, பயிற்சியாளர் கணேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.