ADDED : மார் 09, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
கொத்தவால்சாவடி: கொத்தவால்சாவடி, வரத முத்தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் ரத்தன்லால், 43. இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் அவரது கடைக்கு வந்த மீன்பாடி வண்டியில் இருந்த சரக்குகளை, லோடுமேன் சரவணன் இறக்கி கொண்டிருந்தார். அப்போது, வண்டியில் இருந்த 9,000 ரூபாய் மதிப்பிலான 'கிட்கேட்' சாக்லேட் பெட்டி மாயமானது தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரித்த கொத்தவால்சாவடி போலீசார் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ், 36, சாக்லேட் பெட்டிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று முன்தினம் கைது செய்து, 'கிட்கேட்' சாக்லேட் பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
