/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ளேரியம்மன் கோவிலில் கொலு மண்டபம்
/
வெள்ளேரியம்மன் கோவிலில் கொலு மண்டபம்
ADDED : அக் 04, 2025 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ராஜ வீதியில், வெள்ளேரியம்மன் கோவில் கொலு மண்டபம் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு, செப்.,29ம் தேதி நவராத்திரி உத்சவம் துவங்கியது. தற்காலிக கொலு மண்டபத்தில், தினசரி வெள்ளேரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நவராத்திரி விழா நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் கீழாண்டை ராஜவீதியில் பார்வேட்டை உத்சவம் நடந்தது. இதில், மகிஷாசூர மர்த்தினி அலங்காரத்தில், வெள்ளேரியம்மன் அருள்பாலித்தார்.